Home முக்கியச் செய்திகள் வடக்கில் உயரும் உயிர்ப்பலி! கொழும்பிலிருந்து வந்த குழு யாழில் ஆய்வு

வடக்கில் உயரும் உயிர்ப்பலி! கொழும்பிலிருந்து வந்த குழு யாழில் ஆய்வு

0

புதிய இணைப்பு

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான
நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்
உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா
அபயக்கோன் உள்ளிட்ட குழுவினர் இன்று (12) காலை  யாப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.

யாழ் போதான வைத்தியசாலைக்கு விஜயம் செய்த குழுவினர் அங்கு ஆய்வு
நடவடிக்கைளில் ஈடுபட்டதுடன் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்
த.சத்தியமூர்த்தி, பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா உள்ளிட்டவர்களுடன்
கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்ததக்கது.

முதலாம் இணைப்பு 

வடக்கு மாகாணத்தில்(northern province) அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக இன்று(11) மாலை வரையில்
7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும்
நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார
மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி
ஆ.கேதீஸ்வரனுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N.Vedhanayagan) ஆலோசனை
வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாண (jaffna)மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு (mullaitivu)மாவட்டத்தில் ஒருவருமாக இதுவரை 07 பேர்
உயிரிழந்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர்எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளருடன், ஆளுநர் தொலைபேசியில் இன்று புதன் கிழமை மாலை (11.12.2024)
உரையாடினார்.

உயிரிழப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை

உயிரிழப்புக்கான காரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மாதிரிகள்
கொழும்பு மற்றும் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர், எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வேறு வைரஸ் தொற்றுக்களாகவும்
இருக்கக்கூடும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருப்பதாகவும் அது தொடர்பான
விவரங்களையும் ஆளுநரிடம் குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் ஆராய்வதற்காக
கொழும்பிலிருந்து இரண்டு குழுக்கள் நாளையும், நாளை மறுதினமும் வருகை தரவுள்ளன
என்றும் தெரிவித்தார்.

 ஆளுநரின் ஆலோசனை

இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பு மருந்துகள் வேறு மாவட்டங்களிலிருந்தும்
பெற்றுக்கொள்ளப்பட்டு விநியோகிக்க நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதேபோன்று ஒரு
தொகுதி மருந்துக்கு கொழும்பு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவத்துறையினர் அர்ப்பணிப்புடன்
மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டத்தில் இந்தக் காய்ச்சலால்
பாதிப்புறாத ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவிலிருந்து மருத்துவ
அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்களைப் பெற்று அவற்றை வினைத்திறனுடன்
மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார். 

NO COMMENTS

Exit mobile version