நோர்வேயில் உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாகக் கால் இறுதி வரை முன்னேறிப் புதிய சாதனை படைத்த நோர்வே தேசிய கால்பந்து அணி வீரர்களை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டனர்.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சுமார் 90,000 இரசிகர்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான மற்றும் உற்சாகமான வரவேற்பை அளித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக கோல்கள்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலியிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நோர்வே அணி களமிறங்கியது. காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணியை வீழ்த்தியது.
நோர்வே வீரர எர்லிங் ஹாலண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எர்லிங் ஹாலண்ட் மேஜிக்கை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்திற்கு முன்னதாக 7 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பே, மெஸ்சிக்கு அடுத்த இடத்தில் ஹாலண்ட் இருந்தார்.
தோல்விக்கு முக்கிய காரணம்
ஆனால் எர்லிங் ஹாலண்ட் செய்த தவறே நோர்வே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டியின் 55வது நிமிடத்தில் நோர்வே அணி அடித்த கோல் நடுவரால் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது.
உலகத் தரவரிசையின் முன்னணி 4 அணிகளான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஆர்ஜெண்டினா ஆகியன தற்போது அரையிறுதிச் சுற்றில் மோதவுள்ளன.
இந்நிலையில், இத்தொடரில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதி வரை தகுதிபெற்று வெளியேறிய நோர்வே அணிக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/norway-receive-heros-welcome-after-world-cup-exit-1784005439
