Home இலங்கை அரசியல் ரணிலிடம் சென்றவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை : மகிந்த தெரிவிப்பு

ரணிலிடம் சென்றவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை : மகிந்த தெரிவிப்பு

0

தன்னைக் கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தச் சென்றவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது மூத்த புதல்வருடன் கண்டிக்கு தலதா மாளிகையில் தரிசனம் செய்து மகா நாயக்க தேரர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விட்டுச் சென்றவர்கள்

எந்தவொரு தேர்தலும் சவாலானது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாமல் ராஜபக்ச வெற்றியீட்டுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு மகிந்த ராஜபக்ச சிரித்துக் கொண்டே ,

“எனக்கு அருகில் ஒரு சலூன் கதவு உள்ளது. நீங்கள் செல்லலாம். நீங்கள் வரலாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் ” எனவும் பதிலளித்தார். 

NO COMMENTS

Exit mobile version