Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளரால் தேர்தலிலே எதையும் சாதிக்க முடியாது : சுமந்திரன் பகிரங்கம்

தமிழ் பொது வேட்பாளரால் தேர்தலிலே எதையும் சாதிக்க முடியாது : சுமந்திரன் பகிரங்கம்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் மூலமாக நாம் எதையும் சாதிக்க முடியாது. மாறாக இவ்வாறான முயற்சியிலே நாம் இறங்குவதன் மூலமாக எங்களுக்கு இருக்ககூடிய அரசியல் பலத்தை சிதைத்து விடக்கூடிய வேலைத்திட்டமாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வாக்குப்பலம் 

மேலும் தெரிவிக்கையில், “எண்ணிக்கையிலேயே சிறுபான்மையாக இருப்பவர்களின் வாக்குப்பலம் எப்போதும் பலனளிக்காது.

ஆனால் பிரதான வேட்பாளர்கள் 3 பிரிவுகளாக பிரிந்திருக்கின்ற போது அந்த வாக்குப்பலம் மிகவும் பெரிதாக தோற்றமளிக்கும். இதுவும் அவ்வாறானதொரு தருணம்.

எங்களுடைய வாக்குப்பலம் வழமைக்கு மாறாக மிகவும் பலமுள்ளதாக வருகின்ற ஒரு சந்தர்ப்பத்திலே அதை புறந்தள்ளி ஒன்றில் புறக்கணிப்பது அல்லது வெல்ல முடியாது என தெரிந்திருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளிப்பதன் மூலமாக எங்களுடைய கைகளிலே இந்த தருணத்திலே கிடைத்திருக்க கூடிய மிகப்பெரிய அரசியல் ஆயுதத்தை நாங்கள் உபயோகிக்காமல் இருப்பது முட்டாள்தனமான செயற்பாடு” என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version