Home இலங்கை வெளிநாடொன்றில் இருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

வெளிநாடொன்றில் இருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் செல்லுபடியாகும் விமான அனுமதிப்பத்திரம் இல்லாத அல்லது விமான அனுமதிப் பத்திரம் இல்லாத இலங்கையர்கள், இம்மாதம் 25 ஆம் திகதி அதற்கு முன்னர் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் படி, இந்த பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதிபூண்டுள்ளது.

சட்டப்பூர்வ விசா

இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி சட்டப்பூர்வ விசாவைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்புமாறு துணைத் தூதரகம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version