Home இலங்கை வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை முதல் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை அந்நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்கள் திறந்த பகுதிகள் என்று இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்கள்

எனவே அவசரநிலை ஏற்பட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான வழிமுறைகளைப் பின்பற்றமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் நிலையில் இஸ்ரேலிய தூதரம் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version