Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

0

160,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இம்மாதம் 26ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

மேலும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

Source: https://tamilwin.com/article/notification-of-central-bank-of-sri-lanka-1719153821

NO COMMENTS

Exit mobile version