Home முக்கியச் செய்திகள் புலம்பெயர்ந்தோருக்கு அச்சுறுத்தல்: ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

புலம்பெயர்ந்தோருக்கு அச்சுறுத்தல்: ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் (Rajitha Senaratna) கருத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிறவந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) அண்மையில் தெரிவித்திருந்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட சேனாரத்ன, வெளிநாட்டு ஊழியர்களை வாக்களிக்க இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அச்சுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தேசிய மக்கள் சக்தி அரசியல் சபையின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்

குறிப்பாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிக்க இலங்கைக்கு வர வேண்டாம் என புலம்பெயர் தொழிலாளர்களை சேனாரத்ன அச்சுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பல மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், இந்தநிலையில் அச்சுறுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் iv பிரிவில் உள்ள 78(1) சரத்தை ராஜித சேனாரத்ன தேவையற்ற செல்வாக்கு செலுத்தி மீறியுள்ளார் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version