Home இலங்கை அரசியல் அநீதியாக கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும்: என்பிபி தரப்பு உறுதி

அநீதியாக கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும்: என்பிபி தரப்பு உறுதி

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அநீதியாக கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப்
பெற்றுக் கொடுக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(30) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்
தெரிவிக்கையில்,

பட்டலந்த வதை முகாம் என்பது மக்களால் துன்பியல் சம்பவமாக கருதப்பட்ட விடயம்.

ஆனால் விசாரணைகள் என்பது கடந்த காலங்களில் எந்த அரசாங்கத்தாலும்
மேற்கொள்ளப்படவில்லை. அது உண்மையில் துப்பாக்கியமான ஒரு நிலமை.

அதேநேரம், எங்களுடைய அரசாங்கத்தில் அநீதியாக கொலை செய்யப்பட்டவர்கள், பட்டலந்த
சித்திரவதை முகாம் ஊடாக சித்திரவதை செய்யப்பட்டு மனிதத்திற்கு அப்பால் சென்று
மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டவர்களுக்குரிய விசாரணைகள் இடம்பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version