Home இலங்கை அரசியல் இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ள அநுர அரசு : மகிழ்ச்சியில் திளைக்கும் முன்னாள் எம்.பி

இந்தியாவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ள அநுர அரசு : மகிழ்ச்சியில் திளைக்கும் முன்னாள் எம்.பி

0

இந்தியாவின் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்(npp) இறுதியாக அங்கீகரித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன(Eran Wickramaratne) இன்று (08) இந்திய தொலைக்காட்சி நியூஸ்எக்ஸிடம் தெரிவித்தார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி, இந்தியாவின்(india) முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது என்பதையும், அது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்பதையும் அறிவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று விக்கிரமரட்ன தெரிவித்தார்.

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துங்கள்

“எனினும், அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும், மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒப்பந்தங்கள் முக்கியமானவை, ஆனால் அவை இலங்கையின் கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.    

NO COMMENTS

Exit mobile version