Home இலங்கை அரசியல் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிராமங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்

மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிராமங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்

0

 மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்திருந்த தேசிய அரசியல் மாற்றம் கிராமங்கள் வரையில் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நாட்டின் பல உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியை நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள், நகரங்கள் ஊடாக இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை வழிநடத்தக் கூடிய திறமையானவர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் தெரிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த மாற்றத்தின் ஊடாக நீண்ட துரம் பயணம் செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாணந்துறை நகரசபையின் நகரபிதாவாக ஹேமகுமார பெரேரா பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version