Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்காவினால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

அமெரிக்காவினால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளுக்கு எதிராக, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தால் அமெரிக்க ஜனாதிபதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டை பரிசீலித்த அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

வரி முறை

எனினும், 12 மாநில அரசாங்கங்களும், நிவ்யோர்க் சட்ட உயர் அதிகாரிகள் உட்பட பல பலம் வாய்ந்த நபர்களும் ஜனாதிபதியின் வரி முறையை அங்கீகரிக்கவில்லை.

3 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டால், இலங்கை ஏற்றுமதிகளுக்கும் 54 சதவீத வரி விதிக்கப்படும்.

இது இலங்கை ஆடைத் தொழில் உட்பட பல வணிகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version