சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள்ளும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
போலி பட்டம் என்றால் அது யாராக இருந்தாலும் அவரை அம்பலப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு இல்லை என்றால் கஸ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றவர்களுக்கான பெறுமதி இல்லாமல் போய்விடும் எனவும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பேராசிரியர் நந்தசிறி கிம்பியேஹெட்டி தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள்
சமூக ஊடகமொன்றில் அவர் இந்த விடயம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகரின் கல்வித் தகைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நந்தசிறி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவில் கலாநிதி நந்தசிறியும் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.