தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் வரிப் பணத்தை விரயமாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த ராஜபக்ச அரசாங்கத்தை விடவும் தற்போதைய அரசாங்கம், மக்கள் பணத்தை விரயமாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
பத்தாம் நாடாளுமன்றின் ஆரம்ப அமர்வின் போது சோமாலியாவிலிருந்து ஒரு கூட்டம் பாய்ந்ததை பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பார்சல்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து உண்பதாக தேர்தல் மேடைகளில் பேசியவாகள், நாடாளுமன்ற உணவகத்தை ஆக்கிரமித்து உணவு பற்றாக்குறையை எற்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு விநியோகம் செய்ய முடியாது பணியாளர்கள் திண்டாடியதாக சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.