Home இலங்கை அரசியல் யாழில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

யாழில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

0

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி
யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இன்று (14) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17
உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்ட
கட்சி உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி 

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கீகரிக்கப்பட்ட நபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக இன்று (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகை தந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version