Home உலகம் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் படுகொலைகள் : சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை!

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் படுகொலைகள் : சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை!

0

இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஸ்ரேலினால் முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவின் சில பகுதிகளில் உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version