Home உலகம் அணுசக்தி செறிவூட்டலை ஒருபோதும் கைவிட முடியாது : ஈரான் திட்டவட்டம்

அணுசக்தி செறிவூட்டலை ஒருபோதும் கைவிட முடியாது : ஈரான் திட்டவட்டம்

0

அணுசக்தி திட்டம் தமது விஞ்ஞானிகளின் சாதனை என்பதால், அணுசக்தி செறிவூட்டலை தாங்கள் ஒருபோதும் கைவிட முடியாது என ஈரான் (Iran) அறிவித்துள்ளது. 

குறித்த விடயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. 

அணுசக்தி திட்டம்

இதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. 

இதனிடையே அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் தாக்குதல் நடத்துவோம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் அணுசக்தி திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

அத்தோடு, தாக்குதலில் தீவிரமான சேதங்கள் ஏற்பட்டதால் அணுசக்தி திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version