இலங்கையில் அரசாங்க தாதியர் சேவையில் ஈடுபடுவோர் அணியும் சீருடை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
தாதியர்களின் சீருடையை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தாதியர்களின் சீருடை மாற்றம் செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கடந்த நாட்களில் அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான சீருடைகள் தொடர்பிலும் கடந்த சில வாரங்களாக வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றிருந்தன.
சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தாதியர்களின் சீருடை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் அரசாங்க தாதியர்களின் சீருடை எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
