நுகேகொடவில் சிறிது நேரத்திற்கு முன்பு ஆரம்பமான பொது இணக்கக் குழுவின் பேரணியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
பேரணி தொடங்கிய உடனேயே மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரத் தடை
இதனால் நிகழ்ச்சி ஆரம்பமே இடையூறுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
மின்சாரத் தடை ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிகளினால் அரசாங்கத்திற்கு எதிராக இந்தப் பேரணியும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொலிஸார் கூட்டத்திற்காக பொருத்தப்பட்டிருந்த ஒலிப் பெருக்கிகளை அகற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
