Home முக்கியச் செய்திகள் இணையத்தில் குறிவைக்கப்படும் முதியவர்கள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இணையத்தில் குறிவைக்கப்படும் முதியவர்கள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

0

இணையவழி நிதிக் குற்றங்களில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என குற்றப் புலனாய்வுத் துறை (Criminal Investigation Department) தெரிவித்துள்ளது.

இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்ற முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இணையக் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சீனா (China), இந்தியா (India) மற்றும் தாய்லாந்து (Thailand) போன்ற பல நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்த நாட்டிற்கு வந்து தங்கியிருப்பவர்கள் இணையத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுப் பிரஜைகள் 

வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் அவர்களது குற்றங்களுக்கு ஆதரவான உள்ளூர் சந்தேக நபர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை மீட்க செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு பேக்கேஜ்களில் பணத்தை டெபாசிட் செய்ய தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நபர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாகப் பெறும் சைபர் குற்றவாளிகள், கணக்கில் உள்ள பணத்தை லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் மற்றுமொறு மூத்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version