Home உலகம் இஸ்ரேல் பிணைக்கைதிகள் திரும்ப மாட்டார்கள்…! பழிதீர்க்க துடிக்கும் ஹமாஸ்

இஸ்ரேல் பிணைக்கைதிகள் திரும்ப மாட்டார்கள்…! பழிதீர்க்க துடிக்கும் ஹமாஸ்

0

காசாவில் (Gaza) இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன்,  இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

[BEJLRSG
]

உயிரை தியாகம்

கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இடம்பெற்ற இஸ்ரேல் (Isrel) – ஹமாஸ் போரில் பெரும் புள்ளியாக செயல்பட்ட சின்வார், கடந்த புதன் கிழமை  (16) பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் போது கொல்லப்பட்டார்.

யஹ்யா சின்வர் படுகொலைக்கு பின் ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒருவர் தொலைக்காட்சி உரையில் பேசும்போது, “மறைந்த யஹ்யா சின்வர் உறுதியான, தைரியமான வீரர். சின்வர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு புனித போராளியாகவே வாழ்ந்துள்ளார்.

நமது விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். சின்வரின் மரணம் நமது குழுவை இன்னும் பலப்படுத்தும்.

காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்.

ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர்

இதேவேளை, ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர் மஹ்மூத் ஹம்தான் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளன.

சின்வார் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், IDF (இஸ்ரேலிய பாதுகாப்பு படை) துருப்புக்களுடன் நடந்த மோதலின் போது அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சின்வாரைக் காக்கும் பொறுப்பு ஹம்தானுடையது என்றும், ஹமாஸின் தல் அல்-சுல்தான் படைப்பிரிவின் தளபதியாக இருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.youtube.com/embed/PwUAa6393xc

NO COMMENTS

Exit mobile version