Home இலங்கை குற்றம் யாழில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது

யாழில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம்(Jaffna) – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் 19.06.2024) இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளை சுன்னாகம்
பொலிஸார் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்
இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மற்றும் 6000 மில்லிலீட்டர் கசிப்பு
என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/one-arrested-with-massive-toddy-in-jaffna-1718806121

NO COMMENTS

Exit mobile version