Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்

கட்டுநாயக விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பெண் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று(29.12.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 41 வயதான தென்னாபிரிக்க பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

குறித்த பெண் தமது பயணப்பையில் 4. 068 கிலோ கிராம் கொக்கயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 142 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version