Home இலங்கை அரசியல் அநுரவின் ஆட்சியில் இலக்கு வைக்கப்படுகிறார்களா தமிழர்கள் : இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு நேரலை

அநுரவின் ஆட்சியில் இலக்கு வைக்கப்படுகிறார்களா தமிழர்கள் : இன்று இரவு 9 மணிக்கு சிறப்பு நேரலை

0

இலங்கையில் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டு மக்கள் மிப்பெரிய ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

கடந்த கால அரசாங்கங்களின் மீது ஏற்பட்ட ஒட்டுமொத்த வெறுப்பின் எதிரொலியாகவே இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக, தற்போது ஆட்சியமைத்துள்ள ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு எப்போதும் இல்லாதவாறு வடக்கு – கிழக்கு தமிழர் பகுதியைச் சேர்ந்த மக்களும் பெருமளவில் தங்களது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழர் விவகாரம் தொடர்பில் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள் எப்படி இருக்கின்றன? எப்படி அமையப் போகின்றன என்பது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் உள்ளன.

தமிழர் விவகாரத்தில் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள் எத்திசை நோக்கி பயணிக்கின்றது என்பது தொடர்பில் லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு விரிவாக ஆராய்கின்றது.

இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞா. சிறிநேசன், யாழ். மாநகர சபை முன்னாள் மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், பிரித்தானியாவில் இருக்கும் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நேரலையானது இலங்கை நேரப்படி இன்று இரவு 09 மணிக்கும் பிரித்தானிய நேரப்படி மாலை 03.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version