Home உலகம் இஸ்ரேலுக்கு கடத்தப்பட்ட ஒரு இலட்சம் யூதர்கள்! மொசாட் நடத்திய அதிரடி Operation

இஸ்ரேலுக்கு கடத்தப்பட்ட ஒரு இலட்சம் யூதர்கள்! மொசாட் நடத்திய அதிரடி Operation

0

எத்தியோப்பியா மற்றும் சூடானில் இருந்த பீட்டா இஸ்ரேல் (Beta Israel) என்று அழைக்கப்பட்ட யூத சமூகத்தை, இஸ்ரேலுக்கு கொண்டு சென்றது ஒரு நீண்டகால இரகசிய மனிதாபிமான நடவடிக்கையாகும்.

இதை பொதுவாக “மொசாட்” செய்ததாகச் சொன்னாலும், இது இஸ்ரேல் அரசு, மொசாட், இராணுவம், சர்வதேச அமைப்புகள் சேர்ந்து செய்த முயற்சி என்றும் ஒருபக்க கருத்துக்கள் காணப்படுகின்றன.

1970 மற்றும் 1980-களில் எத்தியோப்பியா மற்றும் சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு போர், பஞ்சம் மற்றும் மத அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் காரணமாக, யூத சமூகத்தின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை இஸ்ரேலுக்கு மீட்கும் முடிவை இஸ்ரேல் அரசு எடுத்தது.

1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட “ஒபரேஷன் மோசஸ்” நடவடிக்கையின் போது, ஆயிரக்கணக்கான யூதர்கள் இரகசியமாக சுடான் வழியாக விமானங்களில் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், 1991ஆம் ஆண்டு நடந்த “ஒபரேஷன் சாலமன்” நடவடிக்கையில், வெறும் 36 மணி நேரத்தில் சுமார் 14,000 பேர் இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில், விமானங்களில் இருக்கைகள் அகற்றப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்தனர்.

இந்த அனைத்து கட்டங்களையும் சேர்த்து, கிட்டத்தட்ட 90,000 முதல் 1,00,000 வரை எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேலுக்கு மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த ஒபரேஷன் நடவடிக்கைகளில் மொசாட் காட்டிய தீவிரம் மற்றும் நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/hRqZ8OlZTjk

NO COMMENTS

Exit mobile version