இந்தியன் 2
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2.
லைகா நிறுவனம் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ஜெகன், ரகுல் ப்ரீத் சிங் என பலரும் நடித்திருந்தனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சூர்யாவை டிரோல் செய்வோருக்கு நான் சொல்வது.. இயக்குநர் அதிரடி பேச்சு
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
வசூல்
இன்றுடன் இப்படம் வெளிவந்து ஒரு வருடத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தோல்வியை தழுவிய இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ. 150+ என கூறப்படுகிறது.
