ஆறு அரசு நிறுவனங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்து தகவல் அறிக்கைகளையும் சட்ட நடவடிக்கைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, சபரகமுவ பல்கலைக்கழகம், காணி சீர்திருத்த ஆணைக்குழு,
ஊழல் மோசடி
மஹாபொல அறக்கட்டளை நிதியம், மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனை ஆகிய ஆறு நிறுவனங்களில் நடந்த ஊழல் தொடர்பான அறிக்கைகள் CIDயிடம் ஒப்படைக்கப்படும் எனஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட நிறுவனங்களில் நடந்த ஊழல் மற்றும் மோசடி தொடர்பான கடுமையான வழக்குகள் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கரிம உர பரிவர்த்தனை தொடர்பான அறிக்கையும் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நிஷாந்த சமரவீர மேலும் கூறினார்.
