உரிய தகுதியுடையவர்களுக்கு மட்டும் உர மானியம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
உரிய காலத்தில் உரியவர்களுக்கு மட்டும் உர மானியங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் நிறுவனப் பிரதானிகளுடன் நடைபெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு அமைச்சும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் விவசாய ஆய்வு உதவியாளர் பதவி வெற்றிடங்கள் 35 வீதம் வெற்றிடமாக உள்ளதாகவும் இதனால் உர மானியங்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
