Home உலகம் ரஷ்யா வசமான மேலும் நான்கு உக்ரைன் கிராமங்கள்

ரஷ்யா வசமான மேலும் நான்கு உக்ரைன் கிராமங்கள்

0

ரஷ்யாவிடம் (Russia) மேலும் நான்கு உக்ரைன் (Ukraine) எல்லை கிராமங்கள் வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க புடின் உத்தரவிட்ட மறுநாள் சுமி பிராந்தியத்தில் இந்த கிராமங்களை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து பிராந்திய ஆளுநா் ஒலே ரிஹோரொவ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பான பகுதி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாகக் கூறி எதிரிப் படையினா் சுமி பிராந்தியத்தில் தங்களது முன்னேற்றத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

தற்போது பிராந்தியத்தின் நோவென்கே, பசிவ்கா, வெசலிவ்கா மற்றும் ஷுராவ்கா ஆகிய கிராமங்கள் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அந்த கிராமங்களில் வசித்துவந்த பொதுமக்கள் ஏற்கெனவே பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version