Courtesy: Yusuf
கிழக்கு மாகாணத்தில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மேலும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பத்து வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்கனவே
திறக்கப்பட்டன.
இந்த நிலையில், மேலும் நான்கு வான் கதவுகள் நான்கடி நீரை வெளியேற்றுவதற்காக
திறக்கப்பட்டுள்ளன.
கன மழை
கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 மீட்டர் அடியாகும்.
இந்தநிலையில், கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 113,222 ஏக்கர் அடியாக உயர்ந்துள்ளது எனவும், தற்போது
நாளொன்றுக்கு 1600 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர்
சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.