ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கட்சி அம்பாறை மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.
குறித்த நிகழ்வு, அட்டாளைச்சேனை சக்கி வரவேற்பு மண்டபத்தில், கட்சியின் அட்டாளைச்சேனை
பிரதேச அமைப்பாளர் அமீர் மற்றும் அட்டாளைச் சேனை மத்திய குழுத் தலைவர் ஹம்ஷா
ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட
செயற்குழுத் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அப்துல் றஷாக்
ஜவாத் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கியுள்ளார்.
கட்சி பிரமுகர்கள்
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளரும் முன்னாள்
அமைச்சருமான அமீர் அலியும் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களைக்
கேட்டறிந்தனர்.
மேலும், இந்நிகழ்வில் கட்சியின் பிரதி செயலாளர் எம்.ஏ. அன்சில், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் மாஹிர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
