Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

0

மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தத்தின் படி, எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் இடம்பெறாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதத்தில் நிலவிய அதே விலையில், ஓகஸ்ட் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

எரிபொருள் விலை திருத்தம் வழமை போன்று இன்று நள்ளிரவில் இடம்பெறும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) அறிவித்துள்ளது.

இன்று (31.7.2024) நள்ளிரவில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை

இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகச் சந்தையில் WTI ரக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 1.43% குறைந்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 77.16 டாலராக உள்ளது.

மேலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 81.13 டாலராக உள்ளது, இது 1.51% குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், மக்கள் உணரும் தாக்கத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளளார்

NO COMMENTS

Exit mobile version