Home இலங்கை அரசியல் ரன்வலவின் கலாநிதி பட்டம்: எதிர்ப்புக்கு தயாராகும் எதிர்க்கட்சி எம்பிக்கள்!

ரன்வலவின் கலாநிதி பட்டம்: எதிர்ப்புக்கு தயாராகும் எதிர்க்கட்சி எம்பிக்கள்!

0

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின்(Asoka Ranwala) கலாநிதி பட்டம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து பதவி விலகிய ரன்வல, தனது முனைவர் பட்டம் தொடர்பான சான்றிதழை எழுத்துமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக அறிவித்தார்.

ஆனால் தற்போது இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவரது தகுதியை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை  என எதிர்க்கட்சி வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

பொறியியல் பட்டம்

மேலும், ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டத்தையும் பெற்றதாக அவர் கூறியுள்ளாார்.

எனினும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பெற்ற பொறியியல் பட்டப்படிப்பு சான்தலையும் அவர் முன்வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version