Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்பிரசாரம்

ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்பிரசாரம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் எரிபொருள் குழாய் மூலம் பரிமாற்றம் மற்றும் கேபிள் மூலம் மின்சார விநியோகம் போன்றன தொடர்பில் இறுதிப்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

சூரியசக்தி மின் உற்பத்தி

இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு இணங்கப்பட்டதாக லக்மாலி குறிப்பிட்டுள்ளார்.

   

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் மட்டும் இந்தியாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாத அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version