Home இலங்கை அரசியல் எதிர்தரப்பின் விமர்சனங்களுக்கு அநுர பதில் கூறுவாரா? இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படுமா..

எதிர்தரப்பின் விமர்சனங்களுக்கு அநுர பதில் கூறுவாரா? இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படுமா..

0

 அரசாங்கம் என்றவகையில் இந்த அனர்த்தத்திற்கு பொறுப்புகூற வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு ஆனால் அதிலும் எதிர்கட்சியினர் அரசியல் செய்வதையே காணக்கூடியதாக உள்ளது என்று
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆனால் எமது வெளிநாடுகள் எமக்கு பல வகையில் உதவிகரம் நீட்டியுள்ளன.

இந்தியா- பாகிஸ்தானுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினை இருந்தாலும் மனித நேயத்தின் அடிப்படையில் வான்பரப்புகளையும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அநுர அரசாங்கத்தினர் அனர்த்தத்தை சரியாக கையாள தெரியாமல் உள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

ஆனால் வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே வழங்கிய எச்சரிக்கையும் அவர்கள் மீளப்பெற்றுவிட்டார்கள்.

இவர்கள் கூறுவதை போல அணைக்கட்டுக்களை திறந்து வைத்திருந்தால் விவசாயம் மற்றும் மின்னவாரம் பாதிக்கப்பட்டிருக்கும், அப்போதும் இதேபோல விமர்சனங்களை முன்வைத்திருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..   

 

NO COMMENTS

Exit mobile version