Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளருக்கே எமது ஆதரவு : சித்தார்த்தன் பகிரங்கம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளருக்கே எமது ஆதரவு : சித்தார்த்தன் பகிரங்கம்

0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு
நிலைப்பாடு இருக்கும் என அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.

யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்
கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பரவலாக்கல்

மேலும் தெரிவிக்கையில், “அனுர குமார திசாநாயக்க தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக என்னையும் இன்றைய தினம் எங்களுடைய
கட்சியினையும் இன்று சந்தித்தார்.

சந்தித்த பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை
கூறியுள்ளோம். எனினும் அதிகார பரவலாக்கம் சம்பந்நமாக எதுவும் கூறாத நிலைமை உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பிரிப்பு சம்மந்தமான அதிருப்தியை கூறியிருந்தேன்.
அதேபோல நியாயமான அதிகார பரவலாக்கல் சம்மந்தமான ஒரு பிரேரணையை முன்வைப்பாராக
இருந்தால் மக்கள் நிச்சயமாக பரிசிலீப்பார்கள். காரணம் புதிய மாற்றத்திற்கான
கட்சியாக பார்க்கின்ற நிலை ஒன்று உள்ளது.

அத்துடன் எங்களுடைய கட்சியினை பொறுத்த வரையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக
ஐந்து கட்சிகள் சார்பாகவும் ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தபடுகின்ற பொழுது அதனை
ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டினை எடுத்துள்ளோம்.

ஆகவே ஜனாதிபதி தேர்தல் என
வருகின்ற பொழுது நாம் தமிழ் பொதுவேட்பாளருடனே நிற்போம் என தெளிவாக எடுத்து
கூறியுள்ளோம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version