இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தல்கால வன்முறைகள் என்பது குறைந்தே காணப்பட்டது.
தேர்தல்(election) முடிவடைந்து இன்றையதினம்(23) 09 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.
38 இலட்சம் பேர்
எனினும் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 3,820,738 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்களில், 79.46% மட்டுமே கலந்து கொண்டனர், மொத்தம் 13,619,916 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் 97.8% செல்லுபடியாகும் வாக்குகள், 13,319,616 என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நிராகரிக்கப்பட்ட இலட்சக்கணக்கான வாக்குகள்
இருப்பினும், 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன, இது மொத்த வாக்குகளில் 2.2% ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இம்முறையே வாக்காளர் ஒருவர் 50 வீத வாக்குகளை பெற முடியாமல் விருப்ப தேர்வு வாக்குகள் எண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.