வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை தவிர்த்து வெளிநாட்டு இறக்குமதியே சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மறந்து தற்போது ஆட்சியமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யான ஆட்சி
பொய் கூறுவதை நிறுத்திவிட்டு, முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக உள்ளதாக நாமல் ராஜபக்ச அடித்துரைத்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய நாமல்,
“தேர்தல்கள் நோக்கங்களின்றி வாக்குகளுக்காக அல்லாமல், இப்படி அவசரமாக ஒன்று கூட காரணம் என்ன என பலரும் கேட்கின்றனர். தனிப்பட்ட நோக்கங்கள் அல்ல. மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயார் என்ற செய்தியை வழங்கவே நாங்கள் ஒன்று கூடியுள்ளளோம்.
பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தனர்.
ஐ.எம்.எப் (IMF) வீட்டுக்கு அனுப்புவதாக கூறிய அரசாங்கம் வந்தவுடன் அதனை அரவணைத்துக் கொண்டது.
வாக்குறுதிகளை நினைவுகூரவே நாங்கள் கூடியுள்ளோம் தயவு செய்து பொய்கள் கூறுவதை நிறுத்தி விடுங்கள். பொதுமக்களுக்காக சேவை செய்ய ஆரம்பியுங்கள்.
நீதித்துறைக்கு அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது. காவல்துறை ஆணைக்குழுவுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்காமல் மக்களுக்காக சேவை செய்யுமாறு, அரசாங்க பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
அரசாங்கத்தின் உறுதிமொழி
மக்களுக்கு வழங்கிய உறுதிகளை வழங்க முடியாது விடின், பாதுகாப்பு படைகளை அதற்கு காரணமாக பயன்படுத்தாதீர்கள்.
அன்று விவசாயிகளுடன் வயலுக்கு இறங்கியவர்கள் இன்று விவசாயிகளை கண்டுக்கொள்வதேயில்லை.
வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை விடவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.
அரிசி மாஃபியாவை நிறுத்துவதாகக் கூறிய அரசாங்கம் அதற்கு தீர்வு வழங்கவில்லை.
போதைப்பொருள் ஒழிப்பிற்கு நாங்கள் ஒன்றும் விரோதமானவர்கள் அல்ல. எனினும், சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலகன் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பியுங்கள், என நினைவுகூர விரும்புகின்றோம்.” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அறுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து மாபெரும் மக்கள் குரல் எனும் கருப்பொருளின் கீழ் இன்று (21.11.2025) பொதுப் பேரணியொன்று நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/keQBCZndQ3g
