Home உலகம் மீண்டும் மொங்கோலிய பிரதமராக தேர்வாகியுள்ள ஒயுன் எர்டீன்

மீண்டும் மொங்கோலிய பிரதமராக தேர்வாகியுள்ள ஒயுன் எர்டீன்

0

மொங்கோலியாவின்(Mongolia) பிரதமராக ஒயுன் எர்டீன்(Oyun-Erdene Luvsannamsrai) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 126 இடங்களில் ஆளுங்கட்சியான மங்கோலியா மக்கள் கட்சி 68 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 

மீண்டும் தேர்வு

பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கட்சி 42 இடங்களில் வென்றது. மற்ற 16 இடங்களில் பல்வேறு சிறிய கட்சிகள் வென்றுள்ளன.

இதையடுத்து ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன், மீண்டும் மங்கோலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒயுன் எர்டீன் தனது புதிய அரசாங்கத்தை வரும் வாரத்திற்குள் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version