Home இலங்கை அரசியல் தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியம் வழங்கும் அரசு….! எழுந்துள்ள குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியம் வழங்கும் அரசு….! எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த தகவலை பெஃப்ரல் அமைப்பின் (paffrel) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.

சலுகைகள் வழங்கப்படவில்லை

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்களை வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதனை நிறைவேற்ற முடியும் என பெஃப்ரல் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/paffrel-blame-government-regs-subsidy-to-people-1724384601

NO COMMENTS

Exit mobile version