Home உலகம் காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு

0

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி குண்டுகளை பயன்படுத்தி தகர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களைப் பெற்றதுடன், இது மனிதநேயத்தின் மீதான ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். அமைப்பினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரும், 4 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளும் இதனை செய்ததாக தெரிய வந்தது. அவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பயங்கரவாதி அடில் உசேன் தோக்கரின் வீடு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்யப்படட்டுள்ளதுடன் மற்றொரு பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் டிராலில் உள்ள வீடும் இடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான காணொளி வெளியான நிலையில், குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version