Home இலங்கை அரசியல் மகிந்த யாப்பாவை சந்தித்த பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்

மகிந்த யாப்பாவை சந்தித்த பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்

0

பாகிஸ்தானின்(Pakistan) இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை(Mahinda Yapa Abeywardena) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலானது  இன்று (24)நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் குறைவடைந்து செல்லும் குடும்ப மருத்துவர்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

 சமய ரீதியான சுற்றுலாத் துறை விருத்தி 

பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் சமய ரீதியான சுற்றுலாத் துறையை விருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version