Home இலங்கை இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் இராணுவ தளபதி

இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் இராணுவ தளபதி

0

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்த மாத
இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் ஜூலை 21ஆம்
திகதியன்று, கொழும்புக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளது. 

இலங்கை விஜயத்திற்குப் பிறகு பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர்
இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு நலன்

இந்த இரண்டு விஜயங்களின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள்
விவாதிக்கப்படும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version