அமெரிக்க(America) சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகமைய நிகில் குப்தா என்ற இந்தியர்(India) செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவின்(Canada) குடியுரிமையைப் பெற்றுள்ள குர்பத்வந்த் சிங் பன்னுன்(Gurpatwant Singh Pannun ), காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவராவார்.
இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர், இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நாடு கடத்தல்
மேலும், இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதோடு செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நிகில் குப்தா நேற்றையதினம்(17)அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
குப்தா மீண்டும் ஜூன் 28 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
கொலை செய்வதற்காக ஒருவரை ஏற்பாடு செய்த சதி நிரூபிக்கப்பட்டால் நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.