Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

0

மீண்டும் ஜனாதிபதியாக ரணில்(Ranil Wickremesinghe) தெரிவு செய்யப்பட்டால் அடுத்த பிரதமர் தொடர்பில்  அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுள்..

இதன்போது,  “அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..”  என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஆயுளை கொண்டுள்ள நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் உள்ளது.

அவர் முதலில் 2025ம் ஆண்டுக்கான வரவு – செலவுதிட்டம் குறித்து சிந்திக்கவேண்டும்.

அதற்கான கட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பங்களிற்கு ஏற்ப பல்வேறு விடயங்களை உள்வாங்கவேண்டியுள்ளது.

தேர்தலின் பின்னர் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

இல்லையென்றால் அடுத்த மூன்று மாதங்களிற்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பு இடம்பெறவேண்டும். பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version