Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான அறிவிப்பு

0

எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவித்துள்ளது.

மே மாதம் 06ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதைக் கருத்திற் கொண்டு, அந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகளை 08,09ம் திகதி ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள்

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (21) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அதே நேரம் ஏப்ரல் மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் 8,9,10 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் நடைபெறவுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version