Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள விடயங்கள்

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள விடயங்கள்

0

நாடாளுமன்றம் இன்று (08) மற்றும் நாளை (09) ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் 09.30 முதல் 5.30 வரை இடம்பெறவுள்ள நிலையில் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 6 தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/D0KpvzIBEFA

NO COMMENTS

Exit mobile version