முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ரணில் விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் உடல் நலனைப் பற்றி விசாரிப்பதற்காக ரணில் அவரது வீட்டிற்கு சென்றள்ளார்.
அரசியல்வாதிகள்
மகிந்த ராஜபக்ச அண்மையில் காலில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது நலன் விசாரிப்பதற்காக கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகள் மகிந்த வீட்டிற்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
