Home முக்கியச் செய்திகள் அதிரும் ஆசியா..! 25 இந்திய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

அதிரும் ஆசியா..! 25 இந்திய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

0

புதிய இணைப்பு

இந்தியாவின் (India) 25 ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகத் துறை தெரிவித்துள்ளது.

அவற்றில் சில முக்கியமான இராணுவ நிலைகளுக்கு அருகில் விழுந்து வெடித்து சிதறியதாகவும் பாகிஸ்தானை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் ட்ரோன்களின் பாகங்கள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

பாகிஸ்தானின் லாகூரில் பலத்த வெடிச்சத்தங்கள் மற்றும் சைரன்கள் கேட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் பாகிஸ்தான் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள வோல்டன் வீதியில் இன்று வியாழக்கிழமை காலை தொடர்ச்சியாக மூன்று குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அந்தபகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்பின் தன்மை மற்றும் இடத்தை ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.  

  

குண்டுவெடிப்பு சத்தங்கள்

இதேவேளை லாகூர் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறியதுடன், லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தது.

இது தொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/Phfd9Zq9NcQ

NO COMMENTS

Exit mobile version