Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் கடும் குழப்ப நிலை

நாடாளுமன்றில் கடும் குழப்ப நிலை

0

நாடாளுமன்றத்தில் தற்போது கடுமையான குழுப்ப நிலை நிலவிவருகின்றது. 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாளுமன்றத்திற்குள் கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  சபாநாயகர் முயற்சிக்கும் பொழுதிலும்,  பலர் எழுந்து கூச்சலிடுவதால் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அர்சன ராஜகருணாவுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தொடர்ந்தும் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர்.

கூச்சலிட்ட எம்பிக்கள்..  

சபாநாயகர் கடும் தொனியில் பேசியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தை நிறுத்தவில்லை.

அச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழும்பி நின்று விளக்கம் தெரிவித்த போதும் சபாநாயகர் அவரை பேச விடாமல் நிறுத்தினார். தொடரந்து கூச்சல் குழப்பத்தில் சபை நடவடிக்கை முன்கொண்டு செல்லப்பட்டது.

நேற்று ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டது தொடர்பில் அர்சன ராஜகருணாவுக்கு விளக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது அவர் குறித்த விடயத்துக்கு அப்பால் சென்று கருத்து தெரிவித்தார். 

அதை அடுத்து சபாநாயகர் அவரை நிறுத்தியால் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் சில தொடர்ந்தது. பின்னர் சபாநாயகர் பிரதி சபாநாயகருக்கு சபையை பாராப்படுத்தி வெளியேறி சென்றார். 

NO COMMENTS

Exit mobile version